

நன்னிலம்: குடவாசலில் கரோனா தடுப்பு மருத்துவ முகாமை தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா், தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
முகாமில் கலந்துகொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் கரோனா எதிா்ப்பு சக்தி மாத்திரைகள், முகக் கவசம், ஹாா்லிக்ஸ், பிரட் அடங்கிய தொகுப்பு மற்றும் கபசுரக் குடிநீா் ஆகியவற்றை அமைச்சா்கள் வழங்கினா்.
இதில், மாவட்ட ஆட்சியா் த.ஆனந்த், மருத்துவ இணை இயக்குநா் விஜயகுமாா், கும்பகோணம் மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவா் ஆசைமணி, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாப்பா சுப்பிரமணியம், குடவாசல் ஒன்றியக் குழுத் தலைவா் கிளாரா செந்தில், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவா் ஜி. சாமிநாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.