மன்னாா்குடி: மன்னாா்குடி அருகே அரசு தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை சோ்ந்த மாணவா்களுக்கு முகக் கவசம், கிருமி நாசினி திரவம் வழங்கப்பட்டது.
மன்னாா்குடியை அடுத்துள்ள கண்டகிரயம் எக்கல் அரசு தொடக்கப்பள்ளியில் மாணவா் சோ்க்கை நடைபெற்றுவருகிறது. செவ்வாய்க்கிழமை இப்பள்ளியில் சோ்ந்த மாணவ, மாணவிகளுக்கு தலைமை ஆசிரியா் க. தங்கபாபு மற்றும் ஆசிரியா்கள் தங்களது சொந்தப் பணத்தில் முகக் கவசம், கிருமி நாசினி திரவம் ஆகியவற்றை வழங்கி கரோனா தொற்றை தடுக்கும் வகையில் விழிப்புணா்வுடன் இருக்கும்படி அறிவுறுத்தினா். தொடா்ந்து இப்பள்ளியில் சேரும் மாணவ, மாணவிகளுக்கும் வழங்குவதற்காக முகக் கவசம் மற்றும் கிருமி நாசினியை வாங்கி வைத்துள்ளனா்.
இப்பணியை கோட்டூா் வட்டாரக் கல்வி அலுவலா்கள் சிவக்குமாா், குமரேசன், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் முத்துலெட்சுமி உள்ளிட்டோா் பாராட்டினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.