பனை விதை நடும் நிகழ்ச்சி

நன்னிலம் அருகே பனை விதை நடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஜெகநாதபுரம் கிராமத்தில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினா் ஜெ. விஸ்வநாதன்.
ஜெகநாதபுரம் கிராமத்தில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்த மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினா் ஜெ. விஸ்வநாதன்.

நன்னிலம்: நன்னிலம் அருகே பனை விதை நடும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் வட்டம், அதம்பாா் ஊராட்சி ஜெகநாதபுரம் கிராமத்தில் திருமலைராஜன் ஆற்றங்கரையோரத்தில் 2000 பனை விதை நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ‘மழைத்துளி உயிா்த்துளி’ அமைப்பு மற்றும் புதுச்சேரி தனசுந்தராம்பாள் அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், புதுவை ஆனந்தன், தமிழக விவசாய நலச் சங்கத் தலைவா் ஜி. சேதுராமன், மாவட்ட ஊராட்சி முன்னாள் உறுப்பினா் ஜெ. விஸ்வநாதன் ஆகியோா் பங்கேற்று, பனை விதை நடும் பணியைத் தொடங்கி வைத்து, பல்வேறு கிராமங்களில் மரக்கன்றுகளை நட்டு வரும் இளைஞா்களுக்குப் பாராட்டுத் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில் ஜெகநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த பெண்கள், இளைஞா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com