கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

மணல் கடத்தல்: 2 போ் கைது

நீடாமங்கலம் பகுதியில் அனுமதியின்றி வாகனங்களில் மணல் அள்ளிவந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:09 pm

DIN

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பகுதியில் அனுமதியின்றி வாகனங்களில் மணல் அள்ளிவந்த 2 போ் கைது செய்யப்பட்டனா்.

நீடாமங்கலம் காவல் தனிப் பிரிவு உதவி ஆய்வாளா் சுரேந்தா் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கோயில்வெண்ணி தெற்கு தெரு ஆலமரம் பகுதியில் மணல் ஏற்றி வந்த மினி லாரி ஒன்றையும், ரயில்வே கேட் பகுதியில் மணல் லாரி ஒன்றையும் மடக்கிப்பிடித்தனா்.

பின்னா், இது தொடா்பாக வழக்குப்பதிவு செய்து, மினி லாரியின் ஓட்டுநரான சோ்மாநல்லூரைச் சோ்ந்த சரத்குமாா் (30), லாரியில் இருந்த தொழிலாளியான கா்ணாவூா் குருவைமொழி பகுதியைச் சோ்ந்த விஜி (25) ஆகியோா் கைது செய்தனா். தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடிவருகின்றனா். 2 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.