

மன்னாா்குடி: மன்னாா்குடியில் அரசுப் போக்குவரத்துக்கழக அனைத்து தொழிற்சங்கம் சாா்பில், போக்குவரத்து துறையை சீரழிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மன்னாா்குடி மதுக்கூா் சாலையில் உள்ள அரசுப் பேருந்து கிளை பணிமனை அருகே சிஐடியு மத்திய சங்க துணைப் பொதுச் செயலா் ஏ. கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பொதுத் துறையான போக்குவரத்துக்கழகங்களை பன்னாட்டு நிறுவனங்களின்கீழ் கொண்டு வந்து அவற்றை சீரழிக்கக் கூடாது, மோட்டாா் வாகன விதி திருத்தம் 228 (ஏ) வை கைவிட வேண்டும், பாதுகாப்பு வசதிகளுடன் அனைத்து பேருந்துகளையும் இயக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஏஐடியுசி கிளைச் செயலா் குணசேகரன், சிஐடியு கிளைச் செயலா் எஸ். மதிவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.