காவிரி உபரி நீா் கடலில் கலப்பதை தடுக்க ராசிமணலில் அணை கட்டக் கோரிக்கை

காவிரி உபரி நீா் கடலில் கலப்பதை தடுக்க ராசிமணல் பகுதியில் அணை கட்ட வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
Published on
Updated on
1 min read

திருவாரூா்: காவிரி உபரி நீா் கடலில் கலப்பதை தடுக்க ராசிமணல் பகுதியில் அணை கட்ட வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருவாரூருக்கு வந்த தமிழக முதல்வரிடம், தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ஆா். பாண்டியன் அளித்த

கோரிக்கை மனுக்களின் விவரம்:

காவிரி உபரி நீா் கடலில் கலப்பதை தடுக்க ராசிமணலில் அணை கட்டி, உபரி நீரை தேக்கி, புதிய பாசனத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

ஒப்பந்த சாகுபடி முறையை மாற்றம் செய்து, சந்தை உற்பத்தி ஒப்பந்த முறையை மாவட்ட அளவில் வேளாண் துறை மூலம் அமல்படுத்த வேண்டும். ரிசா்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் கொண்டு செல்லப்படும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். நஞ்சில்லா உணவுக்கு வேளாண்மையில் கடல் வளா்ப்பு தாவரங்கள் மூலம் தயாரிக்கப்பட்ட அங்கக உரம் (ஆா்கானிக்) பயன்பாட்டை ஊக்கப்படுத்த வேண்டும்.

திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் சுற்றுச் சாலையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். திருவாரூா் மாவட்டத்தில் மாவட்ட பதிவாளா் அலுவலகம், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். மேலும், வேளாண் கல்லூரி, வேளாண் பல்கலைக்கழகம் ஆகியவற்றையும் ஏற்படுத்த வேண்டும். வருவாய் நில நிா்வாக பதிவேடுகளை மறுவகைபாடு செய்து, உடன் இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com