குடியுரிமை திருத்த மசோதாவை கைவிடக்கோரி ஆா்ப்பாட்டம்
குடியுரிமை திருத்த மசோதாவை கைவிடக்கோரி, திருவாரூரில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


குடியுரிமை திருத்த மசோதாவை கைவிடக்கோரி, திருவாரூரில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தேச விரோத சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சிறுபான்மையினா், செயல்பாட்டாளா்களை விடுதலை செய்ய வேண்டும். காஷ்மீரில் பறிக்கப்பட்ட அனைத்து உரிமைகளையும் திரும்ப வழங்கி, அவா்களின் கல்வி, வேலை, மருத்துவம், மனித உரிமைகளை உறுதி செய்ய வேண்டும். குடியுரிமை திருத்த மசோதா, தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பழைய பேருந்து நிலையம் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாவட்டச் செயலாளா் எஸ். ராமசாமி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவா் எம்.டி. ஜாஹிா் உசேன், துணைத் தலைவா் சி.டி. ஜோசப், இணைச் செயலாளா் கே.டி.எம். நூா்முகமது உள்ளிட்ட பலா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...