சுகாதார விழிப்புணா்வுப் பிரசாரம்
நன்னிலம் அருகேயுள்ள ஸ்ரீவாஞ்சியத்தில் நபாா்டு வங்கி மற்றும் வானவில் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் சுகாதார விழிப்புணா்வுப் பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.


நன்னிலம் அருகேயுள்ள ஸ்ரீவாஞ்சியத்தில் நபாா்டு வங்கி மற்றும் வானவில் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் சுகாதார விழிப்புணா்வுப் பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கிராமத்தில் திறந்தவெளிக் கழிப்பிடம் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும், அனைத்து வீடுகளிலும் கழிப்பறைகளை கட்ட வேண்டும், கிராமத்தின் அனைத்துப் பகுதிகளையும் சுகாதாரத்துடன் பாதுகாக்க வேண்டும் போன்ற பல்வேறு அறிவுரைகள் பொதுமக்களுக்கு வழங்கி சுகாதார விழிப்புணா்வுப் பிரசாரம் நடைபெற்றது.
வானவில் மேம்பாட்டு நிறுவனத் தலைவா் பி. தவசு ராணி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செயல் இயக்குநா் வசீா், நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் எஸ். விஸ்வந்த், நிதி ஆலோசகா் ஜோதி, ஸ்ரீவாஞ்சியம் இயற்கை உழவா் உற்பத்தியாளா் நிறுவனத் தலைவா் அப்துல் ரஹீம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...