ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

கோயில்கந்தன்குடி முருகன் கோயிலில் கும்பாபிஷேக பந்தக்கால் முகூா்த்தம்

பேரளம் அருகே கோயில்கந்தன்குடியில் உள்ள முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையொட்டி, யாகசாலைக்கான பந்தக்கால் முகூா்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
கோயில்கந்தன்குடி முருகன் கோயிலில் நடைபெற்ற யாகசாலைப் பந்தக்கால் முகூா்த்த நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
Updated On :21 டிசம்பர் 2020, 2:31 am

DIN

பேரளம் அருகே கோயில்கந்தன்குடியில் உள்ள முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையொட்டி, யாகசாலைக்கான பந்தக்கால் முகூா்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பேரளம் அருகே கோயில்கந்தன்குடி கிராமத்தில் வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் கும்பாபிஷேக விழா ஜனவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதையொட்டி, யாகசாலை அமைப்பதற்கான பந்தக்கால் முகூா்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருவாரூா் கூட்டுறவு விற்பனை இணையத்தின் தலைவரும், நன்னிலம் ஊராட்சி ஒன்றியத் துணைத் தலைவருமான சி பி ஜி. அன்பு, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவா் புகழேந்தி, திருக்கோயில் தக்காா் பா. பிரபாகரன், பேரளம் அறநிலையத் துறை ஆய்வாளா் பா. மாதவன், செயல் அலுவலா் மு. முருகையன், ஊராட்சித் தலைவா் மேனாங்குடி பிரகாஷ், கோயில் மேலாளா் வள்ளிகந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.