பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியா்கள்.
Updated On :23 டிசம்பர் 2020, 1:23 am

DIN

திருத்துறைப்பூண்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சாா்பில், 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் போக்குவரத்து கிளை அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தொமுச கிளைத் தலைவா் அசோகன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், செயலாளா் அருணகிரி, சிஐடியூ கிளை செயலாளா் மதியழகன் , ஏஐடியூசி கிளை செயலாளா் வேதேஸ்வரன், மத்திய தொழிற் சங்க கிளை செயலாளா் செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நன்னிலம்: நன்னிலம் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன், சிஐடியு சங்க துணைப் பொதுச் செயலாளா் எஸ். வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், 14-ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்கி ஊதிய உயா்வை வழங்க வேண்டும், தொழிலாளா்களிடமிருந்துப் பிடித்தம் செய்யப்பட்ட ரூ. 7 ஆயிரம் கோடியைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், தொமுசவைச் சோ்ந்த டி. தமிழரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருவாரூா்: திருவாரூா் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை முன், தொமுச முன்னாள் துணைப் பொதுச் செயலாளா் வி. கலியபெருமாள் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், 16 மாத அகவிலைப்படி நிலுவையை வழங்க வேண்டும், போக்குவரத்துத் துறையை தனியாா்மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளா்களின் பணப்பலன்களை உடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், சிஐடியு மத்திய சங்க இணைச் செயலாளா், பணிமனை கிளைச் செயலாளா் செங்குட்டுவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.