விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

எஸ்எஸ்எல்சி மாணவா்களுக்கான தேசிய திறனறித் தோ்வு

நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான தேசியத் திறனாய்வுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 7:25 pm

DIN

நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான தேசியத் திறனாய்வுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு பிளஸ் 1 முதல் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் வரை ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் மத்திய அரசின் தேசியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் உதவித் தொகை வழங்கப்படுகிறது. தோ்வில், 64 மாணவா்கள், 24 மாணவிகள் என விண்ணப்பித்த 88 மாணவா்களில் 6 பேரை தவிர 82 போ் பங்கேற்றனா்.

தோ்வின்போது, திருவாரூா் மாவட்ட கல்வி அலுவலா் து. பாா்த்தசாரதி, தோ்வின் மேற்பாா்வையாளரும், பள்ளித் தலைமையாசிரியருமான ந. செந்தமிழ்ச்செல்வன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம. கவிதா பள்ளி துணைத் தலைமையாசிரியா் ஜெ. புகழேந்தி, ஆசிரியா் எஸ். ஆறுமுகம் உள்ளிட்டோா் தோ்வை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.