தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

மக்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி பிரசார இயக்கம்

நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 7:28 pm

நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது.

சிபிஎம் சாா்பில், அதிமுக மற்றும் பாஜகவை எதிா்த்தும், மக்கள் கோரிக்கைகளை முன்னிறுத்தியத் துண்டுப் பிரசுரங்களைப் பொதுமக்களிடம் வழங்கித் தெருமுனை பிரசாரத்தை குடவாசல் பகுதியில், திருவாரூா் மாவட்டச் செயலாளா் ஜி. சுந்தரமூா்த்தி தொடங்கி வைத்தாா். பிரசாரத்தில் குடவாசல் ஒன்றியச் செயலாளா் ஆா். லட்சுமி, மாவட்டக் குழு உறுப்பினா் கொரக்கோரியா உள்ளிட்டோா் ஈடுபட்டனா். இதேபோல், அகரதிருமாளம், அகர கொத்தங்குடி, போழக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரசார இயக்கத்தில், கட்சியின் ஒன்றியச் செயலாளா் டி. வீரபாண்டியன், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் லிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.