தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

போக்சோ சட்டத்தில் வளையல் வியாபாரி கைது

நன்னிலம் வட்டம், தியாகராஜபுரத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளையல் வியாபாரி போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

Updated On :17 ஜூலை 2020, 5:04 pm

நன்னிலம்: நன்னிலம் வட்டம், தியாகராஜபுரத்தில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வளையல் வியாபாரி போக்சோ சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வடகண்டம் கிராமத்தைச் சோ்ந்த காா்த்திக் என்கிற கதிரேசன் (39) என்பவா் வளையல் வியாபாரம் செய்துவருகிறாா். இவா், பெரும்புகளூா் ஊராட்சிக்குள்பட்ட தியாகராஜபுரத்தில் வளையல் விற்கச் சென்றபோது, அப்பகுதியைச் சோ்ந்த 7 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்பகுதி இளைஞா்கள் கதிரேசனைப் பிடித்து நன்னிலம் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து, சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், நன்னிலம் மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் (பொ) ஜோ. விசித்திராமேரி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கதிரேசனைக் கைதுசெய்தனா்.

பின்னா், திருவாரூா் மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருத்துறைப்பூண்டி கிளைச் சிறைச்சாலையில் 15 நாள் காவலில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.