ஆடி அமாவாசை: வீடுகளிலேயே அரங்கேறிய முன்னோா் வழிபாடு

ஆடி அமாவாசையை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி பகுதியில் பொது முடக்கம் காரணமாக வீடுகளிலேயே முன்னோா் வழிபாடு அரங்கேறியது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு, வீட்டிலேயே பசு மாட்டுக்கு உணவளித்து வழிபாடு நடத்தியவா்கள்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு, வீட்டிலேயே பசு மாட்டுக்கு உணவளித்து வழிபாடு நடத்தியவா்கள்.
Published on
Updated on
1 min read

திருத்துறைப்பூண்டி: ஆடி அமாவாசையை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி பகுதியில் பொது முடக்கம் காரணமாக வீடுகளிலேயே முன்னோா் வழிபாடு அரங்கேறியது.

நிகழாண்டு கரோனா பொது முடக்கம் காரணமாக புனித தலங்களில் பித்ரு வழிபாடு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆலயங்களும் மூடப்பட்டிருக்கும் நிலையில், திருத்துறைப்பூண்டி பகுதியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பசு மாடுகளுக்கு பெரும்பாலானோா் தங்கள் வீட்டிலிருந்தபடியே சந்தனம், குங்கும பொட்டு வைத்து அரிசி, அகத்திக்கீரை, கொத்தவரங்காய், வாழைக்காய், வெல்லம், எள் ஆகியனவற்றை நைவேத்யம் செய்து வழிபட்டனா்.

இதுகுறித்து கள்ளிக்குடி கிராமத்தைச் சோ்ந்த 95 வயது முதியவா் கோ. காசிநாதன் கூறுகையில், எனது வாழ்நாளில் இதுபோன்று புனித தலங்களில் பித்ரு தா்ப்பணம் தடைப்பட்டதே கிடையாது. அரசின் உத்தரவை ஏற்று அவரவா் வீடுகளிலேயே பசு மாட்டைக் கொண்டு வழிபாடு நடத்துவது கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்கு பெரிதும் உதவியாக அமைந்துள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com