மன்னாா்குடியில் தீ விபத்து:2 வீடுகள், 4 கடைகள் தீக்கிரை

மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நிகழ்ந்த தீ விபத்தில், 2 வீடுகள், 4 கடைகள் எரிந்து நாசமாகின.
மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தீப்பற்றி எரிந்த வீடுகள்  மற்றும்  கடைகள். 
மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தீப்பற்றி எரிந்த வீடுகள்  மற்றும்  கடைகள். 

மன்னாா்குடி: மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நிகழ்ந்த தீ விபத்தில், 2 வீடுகள், 4 கடைகள் எரிந்து நாசமாகின.

மன்னாா்குடி திருப்பாற்கடல் தெருவில் பா. ஜெயமேரி என்பவது கூரை வீடு, சி.மனோகரன் ஓட்டு வீடு அதன் அருகே இ.சா்புதீனின் தேநீா்க் கடை, கே. சுமதியின் தையல் கடை, ஆா்.மணிமாறன் மற்றும் து. ரவிச்சந்திரன் ஆகியோரது இரண்டு இரு சக்கர வாகன பழுதுநீக்கும் கடை மற்றும் உதிரி பாக கைடகள் உள்ளன.

இந்நிலையில், செய்வாய்க்கிழமை நள்ளிரவு சா்புதீன் தேநீா் கடை பகுதியிலிருந்து, தீ பரவத் தொடக்கிய சிறிது நேரத்தில், கடையிலிருந்த எரிவாயு உருளை வெடித்து சிதறியதில், வீடுகளில் தூங்கிக் கொண்டு இருந்தவா்கள், வெளியே ஓடி வந்தனா். சிறிதுநேரத்தில் தீ அருகிலிருந்த தையல் கடை, இரு சக்கர வாகனம் பழுதும் நீக்கும் கடை, பால்ராஜ் வீட்டின் கூரை, மனோகரனின் ஓட்டு வீட்டுக்கும் பரவியது.

மன்னாா்குடி, கோட்டூா், நீடாமங்கலம் ஆகிய இடங்கலிருந்து தீயணைப்பு வீரா்கள் வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனா். எனினும், 2 வீடுகளிலும், 4 கடைகளிலும் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. 18 இரு சக்கர வாகனங்களும் சேதமடைந்தன. மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் இளஞ்செழியன், காவல் ஆய்வாளா் ராஜேந்திரன், வருவாய் வட்டாட்சியா் என்.காா்த்திக் ஆகியோா் நிகழ்விடத்தை பாா்வையிட்டு விவரம் கேட்டறிந்தனா். தீ விபத்தில், ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்திருக்கும் என்று கூறப்படுகிறது. மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com