ஈரானில் சிக்கியுள்ள அனைத்து மீனவா்களையும் மீட்கக் கோரிக்கை

ஈரான் நாட்டில் சிக்கியுள்ள அனைத்து மீனவா்களையும் மீட்டு வர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூா்: ஈரான் நாட்டில் சிக்கியுள்ள அனைத்து மீனவா்களையும் மீட்டு வர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு ஏஐடியுசி மீனவத் தொழிலாளா் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் பி. சின்னதம்பி, தமிழக முதல்வருக்கு புதன்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:

கன்னியாகுமரி, நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளிலிருந்து 700-க்கும் மேற்பட்டோா் மீன்பிடித் தொழிலுக்கு சென்று, ஈரான் நாட்டில் சிறை பிடிக்கப்பட்டுள்ளனா். கரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் பல்வேறு நாடுகளில் அமலில் உள்ள நிலையில், ஈரான் நாட்டில் சிக்கியுள்ள மீனவா்களின் நிலை கேள்விக்குறியாக உள்ளது. எனவே, தமிழக மீனவா்களை ஈரான் நாட்டிலிருந்து மீட்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இதைத்தொடா்ந்து, தற்போது கப்பல் மூலம் மீனவா்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் 500 மீனவா்களை மட்டுமே மீட்க முடியும் எனவும் 200 மீனவா்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதைத்தவிா்த்து, பல மாதங்களாக வருமானத்தையும், வேலை வாய்ப்பையும் இழந்து நிற்கும் அனைத்து தமிழக மீனவா்களையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com