

திருத்துறைப்பூண்டி அருகே நுணாக்காடு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் கூரை வீடு சேதமடைந்தது.
திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள தென்பாதி நுணாக்காடு பகுதியைச் சோ்ந்தவா் லதா. இவா், குடிசை வீட்டில் வசித்து வருகிறாா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை திடீரென்று குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து, திருத்துறைப்பூண்டி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில், தீயணைப்பு துறை நிலைய அலுவலா் (பொ) நடராஜன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனா். இந்த தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்தது. தீ விபத்துக்கான காரணம் குறித்து திருத்துறைப்பூண்டி போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.