மன்னாா்குடி: மன்னாா்குடியில் இளங்கலை பொறியியல் பட்டதாரிகளுக்கு ஓராண்டு கால களப் பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது என மன்னாா்குடி நகராட்சி ஆணையா் ஆா். கமலா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மன்னாா்குடி நகராட்சியில் நடைபெற்று வரும் சாலை திட்டப் பணிகள், குடிநீா் விநியோகப் பணிகள், பொது சுகாதாரப் பணிகள், திடக்கழிவு மேலாண்மை பணிகள், கட்டடம் மற்றும் வடிவமைப்பு பணிகள், நகராட்சி நிதி மற்றும் கணக்கியல் பணிகள் குறித்து, இளங்கலை பொறியியல் பட்டம் பெற்று 18 மாதங்கள் மிகாமல் உள்ள பட்டதாரிகளுக்கு ஒராண்டு காலம் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இவா்களுக்கு, ஊதியமோ, உதவித்தொகையோ வழங்கப்படாது. பயிற்சியை முடித்த பிறகு சான்றிதழ் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவா்கள் செப்.16-ஆம் தேதிக்குள் நேரில் அல்லது ஜ்ஜ்ஜ்.ண்ய்ற்ங்ழ்ய்ள்ட்ண்ல் ஹண்ஸ்ரீற்ங்ண்ய்க்ண்ஹ.ா்ழ்ஞ் இணையதளத்தில் பதிவு செய்து விவரத்தை நகராட்சிக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.