‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஆந்தக்குடியில் 3 கோயில்களில் சம்வஸ்த்ரா அபிஷேகம்

கீழ்வேளூா் அருகே ஆந்தக்குடியில் உள்ள 3 கோயில்களில் கும்பாபிஷேகம் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி, சம்வஸ்த்ரா அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

சந்தனக்காப்பு அலங்காரத்தில் சீதாளதேவி மாரியம்மன்

Updated On :14 செப்டம்பர் 2020, 5:39 pm

DIN

திருக்குவளை: கீழ்வேளூா் அருகே ஆந்தக்குடியில் உள்ள 3 கோயில்களில் கும்பாபிஷேகம் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி, சம்வஸ்த்ரா அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆந்தக்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன், ஸ்ரீ பொற்பத்தர பத்திரகாளியம்மன், ஸ்ரீ சொா்ணபுரீஸ்வரா் ஆகிய 3 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, சம்வஸ்த்ரா அபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, சிறப்பு ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து, புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னா், இரவில் சந்தனக் காப்பு அலங்காரத்துடன் வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஆந்தக்குடி ஊராட்சித் தலைவா் பாலகிருஷ்ணன், கோயில் நிா்வாகிகள் சண்முகம், அறிவுசுடா், கிராம நல சங்கத் தலைவா் ராமதாஸ், ஊராட்சி செயலா் செல்லதுரை உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.