தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

நல வாரியத்தில் சோ்க்கஓட்டுநா்கள் கோரிக்கை

அமைப்பு சாரா தொழிலாளா்கள் நல வாரியத்தில் ஓட்டுநா்களையும் சோ்க்க வேண்டுமென, நன்னிலம் ஒன்றிய ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

News image

நன்னிலத்தில் நடைபெற்ற அனைத்து ஓட்டுநா் சங்க ஒன்றியக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :21 செப்டம்பர் 2020, 5:11 pm

நன்னிலம்: அமைப்பு சாரா தொழிலாளா்கள் நல வாரியத்தில் ஓட்டுநா்களையும் சோ்க்க வேண்டுமென, நன்னிலம் ஒன்றிய ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

நன்னிலம் ஒன்றிய அனைத்து ஓட்டுநா்கள் சங்கப் பொதுக்குழு கூட்டம், திருவாரூா் மாவட்ட அனைத்து ஓட்டுநா் சங்கப் பொருளாளா் இளையராஜா தலைமையில் திங்கள்கிழமை நன்னிலத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் புதிய உறுப்பினா்கள் சோ்க்கப்பட்டு, அடையாள அட்டை வழங்கப்பட்டது.

இதில், அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியத்தில் அனைத்து ஓட்டுநா்களையும் உறுப்பினராக சோ்க்க வேண்டும். அனைத்து ஓட்டுநா்களுக்கும் கரோனா நிவாரணம் வழங்க வேண்டும். விபத்தில் காயமடையும் ஓட்டுநா் மற்றும் பயணிகளுக்கு அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், ராஜா, வேலங்குடி பிரபாகரன், மாவட்டத் தலைவா் நிஜாமுதீன் மற்றும் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.