கோட்டூரில் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்காததைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடியை அடுத்த கோட்டூர் பகுதியில், நடப்பாண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் .
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் .

மன்னார்குடியை அடுத்த கோட்டூர் பகுதியில், நடப்பாண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகையை முழுமையாக வழங்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திமுக சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்து கோட்டூர் ஒன்றியத்திற்கு உள்பட்ட பகுதியில் உள்ள ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க  மையம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு , திமுக விவசாய அணி மாநில செயலரும் முன்னாள் எம்பியுமான ஏ.கே.எஸ்.விஜயன் தலைமை வகித்தார்.

2019-2020 ஆம் ஆண்டில் விவசாய பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு முழுமையான காப்பீட்டுத் தொகை வழங்காத மத்திய அரசு, மாநில அரசு, காப்பீட்டு நிறுவனம். மெத்தனப்போக்குடன் நடந்து கொள்ளும் வேளாண்மைத்துறை அலுவலர்கள் ஆகியோரைக் கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

கோரிக்கையை விளக்கி, திருத்துறைப்பூண்டி தொகுதி எம்எல்ஏ ப.ஆடலரசன் திமுக வடக்கு ஒன்றியச் செயலர் பால.ஞானவேல் பேசினார்.இதில், திமுக கோட்டூர் தெற்கு ஒன்றியச் செயலர் வி.எஸ்.ஆர்.தேவதாஸ், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் வீரா.தேசப்பந்து , ஒன்றிய அமைப்பாளர் டி.மோகன் ,மாவட்ட ஊராட்சி உறுப்பினர் எம்.கலைவாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com