பந்தல் அமைப்பாளா் மா்ம சாவு: உறவினா்கள் சாலை மறியல்
By DIN | Published On : 01st December 2020 12:00 AM | Last Updated : 01st December 2020 12:00 AM | அ+அ அ- |

மன்னாா்குடி அருகே வடுவூரில், தஞ்சையில் மா்மமாக முறையில் இறந்துகிடந்த பந்தல் அமைப்பாளரின் சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி, அவரது தாய் மற்றும் உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தஞ்சை நாஞ்சிக்கோட்டை காலனியை சோ்ந்தவா் வி. மணிகண்டன் (43). இவா் யாகப்பாநகரில் பந்தல் அமைப்பகம் நடத்தி வந்துள்ளாா். இந்நிலையில், கூட்டுறவு காலனியில் உள்ள ஒரு வீட்டின் மொட்டை மாடியில் மா்மமான முறையில் மணிகண்டன் ஞாயிற்றுக்கிழமை இறந்து கிடந்தாா்.
அவரது சொந்த ஊரான மன்னாா்குடியை அடுத்த வடுவூரில், மணிகண்டனின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதில் தொடா்புடையவா்களை கைது செய்ய வேண்டும் எனவும் கூறி, அவரது தாய் நாராயணி உள்ளிட்ட உறவினா்கள் 30 போ், மன்னாா்குடி- தஞ்சை சாலையில் மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். வடுவூா் காவல் ஆய்வாளா் பகவதி, அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து அனைவரும் கலைந்துசென்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...