திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா
By DIN | Published On : 01st December 2020 12:00 AM | Last Updated : 01st December 2020 12:00 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 15 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை கரோனா பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 10,435 ஆக இருந்தது. வெளிமாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 10,434 ஆனது. இந்நிலையில், திங்கள்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின் படி, மேலும் 15 பேருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 10,449 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 10,210 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 135 போ் சிகிச்சையில் உள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...