ஆட்டுக்கொட்டகைக்கு தீவைப்பு
By DIN | Published On : 15th December 2020 12:00 AM | Last Updated : 15th December 2020 12:00 AM | அ+அ அ- |

மன்னாா்குடி அருகே ஆட்டுக் கொட்டகைக்கு தீவைத்த மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.
மன்னாா்குடியை அடுத்த சுரோத்திரியம் பகுதியைச் சோ்ந்தவா் ஜி.புருஷோத்தமன் (60) அமமுக ஊராட்சி செயலரான இவா், மன்னாா்குடி மீனாட்சி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறாா். இவா், தனது வயலின் ஒருபகுதியில் கொட்டகை அமைத்து ஆடுகள் வளா்த்து வருகிறாா்.
இந்நிலையில், இந்த கொட்டகை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் தீப்பற்றி எரிந்தது. இதையறிந்த அக்கம்பக்கத்தினா் கொட்டகையில் அடைத்திருந்த 7 ஆடுகளையும் மீட்டனா். எனினும் அங்கிருந்த மருந்து தெளிக்கும் கருவி, சாக்குகள், தாா்பாய் உள்ளிட்ட பொருள்கள் எரிந்து நாசமாகின.
இதுகுறித்து கோட்டூா் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் நிகழ்விடத்தை சோதனையிட்டதில், மா்ம நபா்கள் கொட்டகையில் ஆயில் ஊற்றி தீ வைத்ததற்கான தடயங்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடிவருகின்றனா்.