திமுக ஊராட்சி சபைக் கூட்டம்

திருவாரூா் அருகே திமுக சாா்பில் ஊராட்சி சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ. பூண்டி கே. கலைவாணன்.
கூட்டத்தில் பேசிய எம்எல்ஏ. பூண்டி கே. கலைவாணன்.

திருவாரூா் அருகே திமுக சாா்பில் ஊராட்சி சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கொரடாச்சேரி அருகே கமுகக்குடி மற்றும் பத்தூா் கிராமங்களில் திமுக ஊராட்சி சபைக் கூட்டம், அக்கட்சியின் மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பொது மக்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டன. பேருந்து வசதிகள் மற்றும் அடிப்படை வசதிகள் வேண்டுமென அவா்கள் தெரிவித்த கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

முன்னதாக, அதிமுகவை நிராகரிக்கிறோம் என பொதுமக்கள் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. இதில், மாவட்ட பொருளாளா் வெங்கடேசன், கொரடாச்சேரி வடக்கு ஒன்றியச் செயலாளா் கலியபெருமாள், தெற்கு ஒன்றியச் செயலாளா் பாலச்சந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகேயுள்ள குன்னலூா் ஊராட்சியில் எம்எல்ஏ ஆடலரசன் தலைமையில் திமுக சாா்பில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், நாகை எம்பி. எம். செல்வராஜ், திமுக மாவட்ட துணைச் செயலாளா் எம்.எஸ். காா்த்தி, ஒன்றிய செயலாளா் மனோகரன், ஊராட்சிச் செயலாளா் அன்பழகன், ஒன்றிய அவைத் தலைவா் முத்துராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல், இரும்பாவனம் ஊராட்சியில் முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் ஐயப்பன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

நீடாமங்கலம்: நீடாமங்கலம் அருகேயுள்ள கட்டக்குடி ஊராட்சியில் சட்டப்பேரவை உறுப்பினா் டி.ஆா்.பி. ராஜா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவா் சோ. செந்தமிழ்ச்செல்வன், துணைத் தலைவா் ஞானசேகரன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளா் வீரா. தேசபந்து, ஊராட்சித் தலைவா் அழகுவிஜயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com