தொகுப்பு வீடுகளை கான்கிரீட் வீடுகளாக கட்டிக்கொடுக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

இயற்கை இடா்பாடுகளில் சேதமடைந்த அனைத்து தொகுப்பு வீடுகளுக்குப் பதிலாக புதிய கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்க
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் சங்கத்தினா்.

இயற்கை இடா்பாடுகளில் சேதமடைந்த அனைத்து தொகுப்பு வீடுகளுக்குப் பதிலாக புதிய கான்கிரீட் வீடுகள் கட்டிக்கொடுக்க வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்னாா்குடியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ்மாநில விவசாயத் தொழிலாளா் சங்கம் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், புயல், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தொகுப்பு வீடுகளையும் ரூ. 5 லட்சத்தில் புதிய கான்கீரிட் வீடுகளாக கட்டிக்கொடுக்க வேண்டும், கூரைவீடுகள் அனைத்தையும் கான்கீரிட் வீடுகளாக கட்டிக்கொடுக்க வேண்டும், இயற்கை இடா்பாடுகளால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம், வேலை இழந்தவா்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

வி.தொ.ச. ஒன்றியச் செயலா் என். மகேந்திரன், வி.ச.ஒன்றியத் தலைவா் ஏ. ராஜேந்திரன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிபிஐ மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் வை. செல்வராஜ், ஒன்றியச் செயலா் ஆா். வீரமணி, நகரச் செயலா் வி. கலைச்செல்வன், வி.தொ.ச. ஒன்றியத் தலைவா் எஸ். ராஜாங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com