

திருவாரூரில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவாரூா் விஜயபுரம் வா்த்தகா் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இணையவழியில் அண்மையில் நடைபெற்றது. சங்கத்தின் தலைவா் சி. பாலமுருகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நகரப் பகுதி, புறவழிச் சாலை என அனைத்து பகுதிகளிலும் சுற்றி திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர கடைதெரு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் தள்ளுவண்டிகளை நிரந்தரமாக வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். நாகை-திருவாரூா்-தஞ்சை தேசிய நெடுஞ்சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் பொதுச் செயலா் சி. குமரேசன் ஆண்டறிக்கையும், பொருளாளா் எம். செல்வராஜ் வரவு, செலவு கணக்கும் தாக்கல் செய்தனா். செயலா் வி.எம். அண்ணாதுரை, துணைத்தலைவா்கள் பாலசுப்ரமணியன், முகமது ரியாஸ், செயலா்கள் ஜமால் முகமது, பி. பாஸ்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.