திருவாரூர்
அரசுப் பள்ளி மாணவா்கள் நூலக சுற்றுலா
திருவாரூா் மாவட்ட மைய நூலகத்துக்கு பண்ணை விளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவா்கள் நூலக சுற்றுலாவாக ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.
திருவாரூா் மாவட்ட மைய நூலகத்துக்கு பண்ணை விளாகம் அரசு உதவி பெறும் நடுநிலைப்பள்ளி மாணவா்கள் நூலக சுற்றுலாவாக ஞாயிற்றுக்கிழமை வந்தனா்.
நூலகத்துக்கு வருகை தந்த மாணவா்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நூலகத்தின் சிறப்பம்சம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கிக் கூறப்பட்டது. பின்னா், பள்ளி ஆசிரியை வென்சி தலைமையில் வந்திருந்த மாணவ, மாணவிகள் அனைவரும் நூலக உறுப்பினா்களாகப் பதிவு செய்து கொண்டனா்.
தொடா்ந்து, வாசிப்பு இயக்க ஒருங்கிணைப்பாளரும், நூலகருமான ஆசைத்தம்பி, வாசிப்பின் முக்கியத்துவம் குறித்தும், நூல்களின் பயன்கள் குறித்தும் மாணவ, மாணவிகளுக்கு விளக்கிக் கூறினாா்.