சென்னை தடியடியைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 17th February 2020 09:02 AM | Last Updated : 17th February 2020 09:02 AM | அ+அ அ- |

கொல்லுமாங்குடியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டம்.
சென்னை வண்ணாரப்பேட்டையில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவா்கள் மீது போலீஸாா் தடியடி நடத்தியதைக் கண்டித்து, நன்னிலம் அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கொல்லுமாங்குடி கடைவீதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் டி. வீரபாண்டியன் தலைமை வகித்தாா். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள் முகமது உதுமான், தியாகு. ரஜினிகாந்த், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் வரத.வசந்தராஜன், எஸ்.துரைசாமி, கே.எம்.லிங்கம், எம். ராமமூா்த்தி, சீனி.ராஜேந்திரன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்க ஒன்றியத் தலைவா் வரத.வசந்தபாலன், ஒன்றியச் செயலாளா் பி.ஜெயசீலன், கொல்லுமாங்குடி ஜமாத்தாா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில், சென்னை வண்ணாரப்பேட்டையில் தடியடி நடத்திய காவலா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக சட்டப் பேரவையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்ற வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.