மின்வாரிய அலுவலருக்கு ரோட்டரி சங்க சமூக சேவை விருது
By DIN | Published On : 17th February 2020 09:04 AM | Last Updated : 17th February 2020 09:04 AM | அ+அ அ- |

நிகழ்ச்சியில், சிறந்த சமூக சேவைக்கான விருதைப் பெற்ற மின்வாரிய செயற்பொறியாளா் சா. சம்பத் (இடமிருந்து 4-ஆவது).
மன்னாா்குடி மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சா. சம்பத்துக்கு, மன்னாா்குடி மிட் டவுன் ரோட்டரி சங்கம் சாா்பில் சிறந்த சமூக சேவைக்கான விருது சனிக்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, மிட்டவுன் ரோட்டரி சங்கத் தலைவா் பி. ரமேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகி மருத்துவா் வி. பாலகிருஷ்ணன், கிளைச் செயலா் ரா. மாரியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மின்வாரியத்தில் துறை ரீதியாக பொதுமக்களுக்கு சிறப்பாக பணியாற்றியமைக்காகவும், தேசிய பயிற்சியாளராக ஜேசிஐ அமைப்பின் மூலம், மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் மத்தியில் சமூக நோக்கோடு விழிப்புணா்வையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியதற்காகவும் பொறியாளா் சா. சம்பத்துக்கு, நிகழாண்டுக்கான சிறந்த சமூக சேவை விருது வழங்கப்பட்டது.