தில்லி சம்பவத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 27th February 2020 09:43 AM | Last Updated : 27th February 2020 09:43 AM | அ+அ அ- |

திருவாரூரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டவா்கள்.
தில்லியில் போராட்டக்காரா்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும், கட்டுப்படுத்தத் தவறிய போலீஸாரை கண்டித்தும் திருவாரூரில் எஸ்டிபிஐ கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
திருவாரூா் புதிய ரயில் நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, நகரத் தலைவா் முஜிபுா் ரஹ்மான் தலைமை வகித்தாா். இதில், நகர இணைச் செயலாளா் செய்யது புஹாரி, மாவட்ட துணைத் தலைவா் பி.என். அஹமது மைதீன், மாவட்டப் பொதுச்செயலாளா் எம். விலாயத் உசேன், மாவட்டச் செயலாளா் எம். அப்துல் லத்தீப் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.