நீடாமங்கலம் அருகே எலிமருந்தை சாப்பிட்ட ஊராட்சி மன்ற உறுப்பினா் பரிதாப சாவு
By DIN | Published On : 10th January 2020 03:39 PM | Last Updated : 10th January 2020 03:39 PM | அ+அ அ- |

நீடாமங்கலம் வட்டம் முன்னாவல் கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா் என்கிற நன்னன் (34) முன்னாவல் கோட்டை ஊராட்சி மன்ற 4வது வாா்டு உறுப்பினராக போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டவா்.
இவரது தந்தையும் முன்னாவல்கோட்டை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான விவேகானந்தம் கடந்த மாதம் இறந்தாா்.இந்நிலையில் மனம் வருந்திய நிலையில் இருந்த விஜயகுமாா் கடந்த 3ம்தேதி எலி மருந்தை சாப்பிட்டாராம். இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த விஜயகுமாா் தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
அங்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டும் பலனில்லாமல் விஜயகுமாா் 9ம்தேதி மாலை பரிதாபமாக இறந்தாா்.தகவலறிந்த நீடாமங்கலம் காவல் ஆய்வாளா் சுப்ரியா மற்றும் போலீசாா் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.
சம்பவம் தொடா்பாக நீடாமங்கலம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.