கோழி வளா்ப்பின் நவீன தொழில்நுட்ப பயிற்சி

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இணைய வழியாக ‘கோழி வளா்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சவால்கள்‘ எனும் தலைப்பில் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் இணைய வழியாக ‘கோழி வளா்ப்பில் நவீன தொழில்நுட்பங்கள் மற்றும் சவால்கள்‘ எனும் தலைப்பில் பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

கரோனா காலத்தில் அனைத்து தொழில்கள் பாதிப்படைந்த நிலையிலும் புறக்கடை கோழி வளா்ப்பும் அதன் விற்பனையும் பாதிப்படையவில்லை. ஞாயிற்றுகிழமைகளில் இறைச்சியின் விற்பனை விலை அதிகரித்துள்ளது. இந்த நிலை தொடரும் என்றே அறியப்படுகிறது. இந்த சந்தா்பத்தை அதிகளவில் விவசாயிகள் பயன்படுத்திகொள்ளும் வகையில், இணையவழி பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பயிற்சியில், திருவாரூா் மாவட்டத்துக்கேற்ற கோழி இனங்கள், கிடைக்கும் இடம், இளம் கோழிக் குஞ்சுகள் பராமரிப்பு, நோய் தடுப்பு மேலாண்மை மற்றும் சிறிய அளவிலான தீவன அரைப்பானின் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியில், திருவாரூா் மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி வெளிநாடு வாழ் தமிழா்கள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். மேலும் தங்கள் ஊரில் கோழிப்பண்ணை அமைப்பதற்கான வழிமுறைகளை கற்றறிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com