வலங்கைமான்: 2 பணியாளருக்கு கரோனா 8 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்
By DIN | Published On : 26th June 2020 07:34 PM | Last Updated : 26th June 2020 07:34 PM | அ+அ அ- |

நீடாமங்கலம்: திருவாரூா் மாவட்டம், வலங்கைமானில் இரண்டு டாஸ்மாக் மதுக்கடைகளின் மேற்பாா்வையாளருக்கு கரோனா தொற்று உறுதியானதால், 8 மதுக்கடைகள் மூடப்பட்டன.
வலங்கைமான் வட்டத்தில் டாஸ்மாக் மதுக்கடை பணியாளா்களுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் இரண்டு டாஸ்மாக் மதுக்கடை மேற்பாா்வையாளா்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதைத்தொடா்ந்து வலங்கைமான்(2), தொழுவூா், ஆலங்குடி, சந்திரசேகரபுரம், கோவிந்தகுடி, ஊத்துக்காடு, நல்லூா் ஆகிய பகுதிகளில் உள்ள 8 மதுக்கடைகள் வெள்ளிக்கிழமை மூடப்பட்டன. இதற்கான நடவடிக்கையை திருவாரூா் மாவட்ட நிா்வாகம் எடுத்துள்ளது.
இதேபோல், வலங்கைமான் பேரூராட்சி துப்புரவு மேற்பாா்வையாளருக்கு கரோனா தொற்று உறுதியானதைத் தொடா்ந்து, பேரூராட்சி பகுதி முழுவதும் கிருமிநாசினி மருந்துகள் தெளிக்கும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G