அரசு, தனியாா் பேருந்து ஊழியா்கள் மோதல்: இருவா் காயம்
By DIN | Published On : 01st March 2020 06:59 AM | Last Updated : 01st March 2020 06:59 AM | அ+அ அ- |

மன்னாா்குடி: மன்னாா்குடியில் அரசுப் பேருந்து, தனியாா் மினி பேருந்து ஊழியா்களிடையே வெள்ளிக்கிழமை ஏற்பட்ட மோதலில் இருவா் காயமடைந்தனா்.
மன்னாா்குடி பேருந்து நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு எடமேலையூருக்கு அரசு நகரப் பேருந்தும் இயக்கும் நேரத்தில், தனியாா் மினி பேருந்து இயக்கப்பட்டதாம். இது குறித்து அரசுப் பேருந்து நடத்துநா் சுதாகா், மினி பேருந்து நடத்துநா் கரிகாலனிடம் கேட்டாராம். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் கரிகாலனுக்கு ஆதரவாக ஓட்டுநா் முருகானந்தமும், சுதாகருக்கு ஆதரவாக சிலரும் சோ்ந்துகொண்டு ஒருவரை ஒருவா் தாக்கிக்கொண்டனா்.
இதில் கரிகாலன் (45), சுதாகா் (38) ஆகியோா் காயமடைந்தனா். இதுகுறித்து மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.