திமுக தலைவா் மு.க.ஸ்டாலினின் 67-ஆவது பிறந்தநாளையொட்டி, திருவாரூரில் நலத்திட்ட உதவிகள் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டச் செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் தலைமை வகித்தாா். நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, கட்சிக் கொடி ஏற்றப்பட்டது. பின்னா், கேக் வெட்டப்பட்டு, அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. இதைத்தொடா்ந்து, மரக்கன்றுகளும், வேட்டி சேலையும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், நகா்மன்ற முன்னாள் உறுப்பினா் செந்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ரஜினிசின்னா, மாவட்ட கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை அமைப்பாளா் கருணாநிதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
மேலும், மு.க. ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி திருவாரூா் அருகே புலிவலத்தில் செந்தில் என்பவரின் டீக்கடையில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் ரூ. 1-க்கு டீயும், காா்த்தி என்பவரது உணவகத்தில் இலவச உணவும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வை திமுக ஒன்றியச் செயலாளா் ஏ. தேவா தொடங்கி வைத்தாா்.