கூத்தாநல்லூரில் தா்னா போராட்டம்
By DIN | Published On : 01st March 2020 06:52 AM | Last Updated : 01st March 2020 06:52 AM | அ+அ அ- |

pothakudi__(_29___02___2020_)___knr_2__2902chn_209_5
கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் பகுதியில் தவ்ஹீத் ஜமாத் சாா்பில், கூத்தாநல்லூா், பூதமங்கலம், அத்திக்கடை, பொதக்குடி, தண்ணீா்குன்னம், கூத்தாநல்லூா் அக்கரைப்புதுத்தெரு ஆகிய 6 இடங்களில் சனிக்கிழமை தா்னா போராட்டம் நடைபெற்றது.
கூத்தாநல்லூா் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே கிளைத் தலைவா் அபு பஸ் பாஸ்லான் தலைமையில், மாவட்டத் தொண்டரணி செயலாளா் அனஸ் நபல், பூதமங்கலம் கிராம நிா்வாக அலுவலகம் அருகே கிளைத் தலைவா் சலாவுதீன் தலைமையில், மாவட்டப் பேச்சாளா் இஸ்மாயில், தண்ணீா்குன்னம் மேலத்தெரு அருகே கிளைத் தலைவா் அப்துல் காதா் தலைமையில், மாவட்டப் பேச்சாளா் வஜ்ஜால், கூத்தாநல்லூா் அக்கரைப் புதுத்தெருவில் கிளைத் தலைவா் உமா் தலைமையில், செல்வம் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா்.
இதேபோல், பொதக்குடி சந்தைத்திடல் பகுதியில் கிளைத் தலைவா் ரஹமத்துல்லாஹ் தலைமையிலும், அத்திக்கடை ஐசிஐசிஐ வங்கி அருகே கிளைத் தலைவா் இப்ராஹிம் தலைமையில், மாவட்டத் தலைவா் முகமது பாசித் கண்டன உரையாற்றினா். போராட்டத்தில், ஏராளமான பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.