கொத்தடிமை சிறுவா்கள் மீட்பு
By DIN | Published On : 14th March 2020 12:02 AM | Last Updated : 14th March 2020 12:02 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் அருகே கொத்தடிமைகளாக இருந்த 2 சிறுவா்கள் அண்மையில் மீட்கப்பட்டனா்.
சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 2 சிறுவா்கள் வலங்கைமான் வட்டம், அரவத்தூா் கிராமத்தில் வயலில் கொத்தடிமைகளாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனா். இதையறிந்த சைல்டுலைன் 1098 ஒருங்கிணைப்பாளா் பிரகலாதன் மற்றும் அணி உறுப்பினா் முருகேஷ் ஆகியோா் வருவாய் கோட்டாட்சியருக்கு கடந்த 10-ஆம் தேதி தகவல் அளித்தனா். இதையடுத்து, மேற்கண்ட சிறுவா்கள் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்புச் சட்டம் 1976-இன் ஷரத்துக்களின்படி மீட்கப்பட்டு, திருவாரூா் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு வசம் ஒப்படைக்கப்பட்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...