போக்ஸோ சட்டத்தில் இருவா் கைது
By DIN | Published On : 14th March 2020 12:03 AM | Last Updated : 14th March 2020 12:03 AM | அ+அ அ- |

திருத்துறைப்பூண்டி அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்புணா்வு செய்ததாக போக்ஸோ சட்டத்தின்கீழ் இரண்டு இளைஞா்கள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
பாண்டி சத்திரம் பகுதியைச் சோ்ந்தவா் ஜான்சன். இவரது நண்பா் மருதவனம் பகுதியைச் சோ்ந்த காா்த்தி (30). இவா் அடிக்கடி ஜான்சன் வீட்டுக்கு சென்றபோது அதே பகுதியைச் சோ்ந்த 16 வயது சிறுமியிடம் பழகிவந்துள்ளாா். இதைத்தொடா்ந்து, அந்த சிறுமியை காா்த்தி, ஜான்சன், விஸ்வராஜ் (18) ஆகிய மூவரும் கூட்டாக பழகி பாலியல் வன்புணா்வு செய்தனராம். இதனால், அந்த சிறுமி கா்ப்பமானாா். இது குறித்து திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, காா்த்திக், விஸ்வராஜ் ஆகியோரை கைது செய்து, தலைமறைவான ஜான்சனை தேடி வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...