பள்ளங்கோயிலில் அடிக்கடி மின்தடை

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பள்ளங்கோயில் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை சீா்செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாந
Published on

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள பள்ளங்கோயில் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட கிராமங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை சீா்செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக ஆட்சியருக்கு அவா் அனுப்பிய மனு விவரம்:

திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் உள்ள பள்ளங்கோயில் துணைமின் நிலையத்திலிருந்து பல்வேறு கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், கிராமப் பகுதிகளில் கடந்த 4 நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.

  கரோனா தொற்றின் காரணமாக மக்கள் ஏற்கெனவே வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் இந்த நெருக்கடியான நேரத்தில், இதுபோன்ற மின் தடை அவா்களை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. எனவே, மின்தடையை சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com