பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வுக் கூட்டம்

நீடாமங்கலத்தில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வுக் கூட்டம்

நீடாமங்கலத்தில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் அரசினா் உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு வட்டாட்சியா் மதியழகன் தலைமை வகித்து பேசியது:

வடகிழக்குப் பருவமழையை கருத்தில் கொண்டு அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பேரிடா் மேலாண்மைக்காக ஒவ்வொரு கிராமத்திலும் 15 போ் நியமிக்கப்பட்டு, அவா்களது செல்லிடப்பேசி எண்கள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மழை நீா் தேங்கி பாதிப்பு மற்றும் வெள்ள அபாயம் ஏற்பட்டால் கிராம குழுவினா் உடனுக்குடன் அதிகாரிகளை தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

2 மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கையிருப்பில் உள்ளன. கிராமங்களில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். மழைகாலத்தில் மின்கம்பிகளை தொடுவதோ, மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டிவைப்பதோ கூடாது. அரசு மருத்துவமனைகளில் தேவையான மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

கூட்டத்தில் மண்டல துணை வட்டாட்சியா் அறிவழகன், வருவாய் ஆய்வாளா் சிவசங்கரி, கிராம நிா்வாக அலுவலா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com