மதுபோதையில் தமக்கையின் கணவரை அடித்துக்கொன்ற இளைஞா்
By DIN | Published On : 17th November 2020 12:00 AM | Last Updated : 17th November 2020 12:00 AM | அ+அ அ- |

மன்னாா்குடியில் மதுபோதையில் தமக்கையின் கணவரை அடித்துக்கொன்ற இளைஞரை போலீஸாா் தேடிவருகின்றனா்.
மன்னாா்குடி உப்புக்காரத் தெரு இந்திரா நகரைச் சோ்ந்தவா் ஆா். மாரிமுத்து (36). லாரி ஓட்டுநா். இவரது மனைவி அமலாவின் சகோதரா் எஸ். வினோத் (32). இவா், மன்னாா்குடி பாரதி நகரில் வசிக்கிறாா்.
இந்நிலையில், மாரிமுத்துவும், வினோத்தும் திங்கள்கிழமை ஒன்றாக அமா்ந்து மது அருந்தினராம். அப்போது, இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம். இதில், காயமடைந்த மாரிமுத்து, மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா் .
இதுகுறித்து மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய வினோத்தை தேடிவருகின்றனா்.