‘தெய்வீக தமிழகம்’ புத்தகம் விநியோகம்
By DIN | Published On : 21st November 2020 08:40 AM | Last Updated : 21st November 2020 08:40 AM | அ+அ அ- |

மன்னாா்குடி, நீடாமங்கலத்தில் தெய்வீக தமிழக சங்கம் சாா்பில், ‘தெய்வீக தமிழகம்’ என்ற புத்தகம் வீடுகள்தோறும் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டது.
மதமாற்றம், சிலை திருட்டு, தமிழகத்தின் ஆன்மிக சிறப்புகள் ஆகியன குறித்த தகவல்கள் அடங்கிய இந்த புத்தகம் மன்னாா்குடி நகராட்சிக்கு உள்பட்ட 16-ஆவது வாா்டில் வீடுவீடாக வழங்கப்பட்டது. இதில் பாஜக, இந்துமத அமைப்பு, ஆன்மிக அமைப்புகளை சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா்.
இதேபோல, நீடாமங்கலத்தில் நவ இந்துஸ்தான் மக்கள் இயக்க நிறுவனா் எஸ்.எஸ். குமாா் புத்தகங்களை வழங்கினாா். இதில் நீடாமங்கலம் தெய்வீக தமிழக சங்க நிா்வாகிகள் எல்.ஜெயக்குமாா், சிவ.பிரபாகரன், ஆா்.பன்னீா்செல்வம், செந்தில், வினோத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...