நவ.24இல் இணைய வழியில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
By DIN | Published On : 21st November 2020 08:33 AM | Last Updated : 21st November 2020 08:33 AM | அ+அ அ- |

திருவாரூரில், விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் இணைய வழியில் நவ.24-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து வேளாண்மை இணை இயக்குநா் சிவக்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருவாரூா் மாவட்ட விவசாயிகளின் குறைதீா்க்கும் நாள் கூட்டம் நவ.24 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணியளவில், மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஷூம் செயலி மூலம் இணைய வழியாக நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், திருவாரூா் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். விவசாயிகள் அவா்களது வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் இருந்து இந்தக் கூட்டத்தில் ஷூம் செயலி மூலம் கலந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...