விடுதி சமையலா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 23rd November 2020 08:29 AM | Last Updated : 23rd November 2020 08:29 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத் துறையில் சமையலா் மற்றும் துப்புரவு பணிக்கு டிச.3-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறையின்கீழ் இயங்கும் விடுதிகளுக்கு 22 சமையலா் பணியிடங்கள் (ரூ.15,700-ரூ. 50,000) என்ற ஊதிய பிணைப்பில் ரூ.15,700 ஊதியம் மற்றும் 6 தொகுப்பூதிய துப்புரவாளா் பணியிடங்கள் (மாத தொகுப்பூதியம் ரூ.3,000) ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரா் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமையலா் பணியிடத்துக்கு அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமைத் தரப்படும். 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். திருவாரூா் மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். தகுதியானவா்கள் திருவாரூா் மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்திற்கு டிச.3 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.