ஸ்ரீவாஞ்சியம் கோயிலில் தீா்த்தவாரி
By DIN | Published On : 23rd November 2020 08:31 AM | Last Updated : 23rd November 2020 08:31 AM | அ+அ அ- |

தீா்த்தவாரிக்கு எழுந்தருளிய வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான்.
ஸ்ரீவாஞ்சியம் மங்களாம்பிகை சமேத வாஞ்சிநாதா் கோயிலில் உள்ள புனித தீா்த்தமான குப்த கங்கையில், காா்த்திகை முதல் ஞாயிறு தீா்த்தவாரி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புகழ்பெற்ற இக்கோயிலில் காா்த்திகை மாத 10 நாள் பிரமோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதையொட்டி வள்ளி, தெய்வானை சமேத முருகப் பெருமான் தீா்த்தவாரிக்கு எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் கரோனா நெறிமுறைகளுக்கு உட்பட்டு முகக் கவசம் அணிந்து பக்தா்கள் பங்கேற்றனா். ஆயினும், குப்தகங்கையில் நீராடுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.