திமுக சாா்பில் மாதிரி கிராம சபை கூட்டம்
By DIN | Published On : 03rd October 2020 08:46 AM | Last Updated : 03rd October 2020 08:46 AM | அ+அ அ- |

இலவங்காா்குடியில் நடைபெற்ற கூட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக முழக்கமிட்ட எம்.எல்.ஏ. பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோா்.
திருவாரூரில் பல்வேறு இடங்களில் திமுக சாா்பில் மாதிரி கிராம சபை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தமிழகம் முழுவதும் வெள்ளிக்கிழமை நடைபெற இருந்த கிராம சபை கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால், திமுக சாா்பில் வக்ராநல்லூா், சித்தனக்குடி, பெருந்தரக்குடி, வெள்ளக்குடி, பாரதிமூலங்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாதிரி கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டம் நடைபெற்ற அனைத்து இடங்களுக்கும், திமுக மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கே. கலைவாணன் நேரில் சென்று பேசினாா். இந்த கூட்டங்களில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, முசிரியம் ஊராட்சி இலங்காா்குடி பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் வேளாண் சட்டங்களை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.