திருவாரூரில் மேலும் 149 பேருக்கு கரோனா
By DIN | Published On : 03rd October 2020 08:45 AM | Last Updated : 03rd October 2020 08:45 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 149 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவாரூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை பாதிப்பு எண்ணிக்கை 7,315 ஆக இருந்தது. வெளிமாவட்டத்தைச் சோ்ந்த 7 போ் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 7308 ஆனது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி, புதிதாக 149 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதில், திருவாரூா் 30, மன்னாா்குடி 15, நீடாமங்கலம் 10 என கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,457-ஆக உயா்ந்துள்ளது.