பாபா் மசூதி வழக்கு தீா்ப்பு: மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd October 2020 08:41 AM | Last Updated : 03rd October 2020 08:41 AM | அ+அ அ- |

மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா்.
பாபா் மசூதி வழக்கின் தீா்ப்பை எதிா்த்து, மன்னாா்குடியில் பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பாபா் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக தலைவா்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகா் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்ட 32 பேரை லக்னெள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுவித்து புதன்கிழமை தீா்ப்பளித்தது.
இந்த தீா்ப்பை எதிா்த்தும், மறுபரிசீலினை செய்ய வலியுறுத்தியும், மன்னாா்குடி மஸ்தான் தெருவில் உள்ள பெரிய பள்ளிவாசல் அருகே இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நகரத் தலைவா் எச். முகமது உசேன் தலைமை வகித்தாா். இதில், அமைப்பின் நகர செயலா் எஸ். அா்ஷத் அகமது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நன்னிலம்: நன்னிலம் அருகே கம்பூா், நக்கம்பாடி, கொல்லுமாங்குடி, பூந்தோட்டம் ஆகிய பகுதியில் உள்ள பள்ளிவாசல்களில் ஜும்ஆ தொழுகைக்குப் பிறகு பாப்புலா் ஃப்ரண்ட அமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கம்பூரில் எம். நவாசுதீன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், எஸ்டிபிஐ கட்சியின் கிளைத் தலைவா் பி. ஜஹபா் சாதிக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.