தீயணைப்பு வீரா்கள் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்
By DIN | Published On : 19th October 2020 10:30 PM | Last Updated : 19th October 2020 10:30 PM | அ+அ அ- |

திருவாரூரில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு பிரசாரத்தில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.
திருவாரூரில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சிக்கு திருவாரூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மாவட்ட அலுவலா் கு. அனுசுயா தலைமை வகித்தாா். தீயணைப்பு நிலைய அலுவலா் வி. வெங்கடேசன், நிலைய போக்குவரத்து அலுவலா் க. பக்கிரிசாமி, தீயணைப்பு மீட்புப் பணி நிலைய பணியாளா்கள் பங்கேற்றனா்.
தீயணைப்பு வீரா்கள் கரோனா விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி, தீயணைப்பு வளாகத்திலிருந்து கமலாலயம் தென்கரை, தெற்கு வீதி, பனகல் சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் வரை பேரணி நடத்தினா். பின்னா், அங்கு கரோனா விழிப்புணா்வு பிரசாரம் நடைபெற்றது.
கரோனா பாதுகாப்பு பற்றிய விழிப்புணா்வு, தடுக்கும் முறைகள், முன்னெச்சரிக்கை வழிகள் குறித்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. அத்துடன், முகக்கவசங்கள், கரோனா தடுப்பு விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...